நம் எல்லோருக்கும் குழந்தைகளைப் பற்றி சில உண்மைகள் தெரியும். குழந்தைகள் நமது எதிர்காலம். அவர்கள் தனி நபராக விளங்குகிறார்கள். அவர்கள் சிறியவராக இருந்தாலும் நமக்கு எந்த அளவுக்கும் குறைவானவர்கள் இல்லை. அவர்கள் கலங்கமற்றவர்கள். அவர்கள் நாம் வாழ்வதற்கு ஒரு முக்கிய நோக்கமும் காரணமும்.
குழந்தைகள் நமக்கு கற்றுக் கொடுப்பதற்காக இருக்கிறார்கள், நாம் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பது போலவே. அவர்கள் நமக்கு கற்றுக் கொடுப்பது ஒன்றுதான் - அது பிணைப்பில்லாத அன்பு. கட்டுப்பாடு, நிபந்தனைகள் இல்லாமல் அவர்கள் நம்மை நேசிக்கிறார்கள். குழந்தைகள் எளிமையானவர்கள், தற்காலத்தில் இருக்கிறார்கள், மற்றும் அவர்கள் தன்னியாழ்பானவர்கள். சஹஜ யோக தியானத்தில் இந்த குணாதிசயங்கள் பெரிதும் மதிப்பிடப்படுகிறது.
அதற்காக நாம் குழந்தைத்தனமாக இருக்க வேண்டும் என்பதில்லை. நம் வயதிற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும், ஆனால் குழந்தைகளிடமிருந்து இந்த மூன்று குணங்களை கடைபிடித்து வாழ வேண்டும் - எளிமை, தன்னியல்பு மற்றும் நிகழ்காலத்தில் வாழ்வது.
வாழ்வின் சில சமயங்களில் நாம் வழி தவறிவிட்டோம், நாம் புனிதத்தன்மையை இழந்துவிட்டோம், நமது அப்பாவித்தனம் மூடி மறைக்கப்படிகிறது என்று
உணர்கிறோம். ஆனால், குழந்தையைப் பார்த்தபின் ஞாபகம் வருகிறது. நாமும் ஒரு காலத்தில் குழந்தையாக இருந்தோம். குழந்தையாக இருந்த போது, நமது உண்மையான ஆத்மாவை கிட்டத்திட்ட பிரதிபலிக்கிறோம்.
எளிமையாக சொன்னால், குழந்தையின் அப்பாவித்தனம் நம் அஹங்காரத்தை கரைக்கிறது.
சஹஜ யோகத் தியானம் செய்ய ஒரு ஆக்க பூர்வ வழி மற்றும்
உங்கள் சிறு குழந்தையிடம் மகிழ்ச்சியான பிணைப்பை உருவாக்குகிறது.
Meditation for kids
குழந்தைகளுக்கான சஹஜ யோகா