தியானம் என்பது என்ன?

உலக விஷயங்களிலேயே ஐக்கியமாகியுள்ள நம் மனதை எந்தவொரு நினைவுகளும் இல்லாமல் நிலைநிறுத்த முற்படுவது, பலவித நினைவுகளில் உழன்று கொண்டிருக்கும் மனதை ஒருநிலைப்படுத்தி நிகழ்காலத்தில் நிற்கவைப்பதன் மூலம் பரம சைதன்யத்தை, உணர வைப்பதே தியானமாகும். தியானம் செய்வதன் மூலமாக கடந்தகால நினைவுகளோ அல்லது வருங்கால நினைவுகளோ மனதைப் பாதிக்காது. நிகழ்காலத்தின் ஆனந்தத்தைப் புரிந்து கொள்ள மனம் ஆரம்பிக்கின்றது. விலைமதிப்பற்ற நிகழ்காலத்தின் அருமையை அறிந்து கொண்ட மனம் எங்கும் அலைபாயாமல், அசையாமல் ஒரு நிலையில் நிற்க முற்படுவதே தியான நிலையாகும்.

 

Meditation - master of yourself - achieved through self-realization