மே மாதம் 5ம் தேதி 1970ல் ,ஸ்ரீமாதாஜி குஜராத் மாநிலத்தில் நார்கோல் பகுதியில் கடலின் அருகாமையில் அமர்ந்து தியானம் செய்யும் பொழுது இந்த பிரபஞசத்தின் சஹஸ்ராரா சக்கரம் திறந்து கொண்ட மிகப்பெரிய நிகழ்ச்சியியைக் கண்ணுற்றார்கள். இதன் மூலமாக மனித இனம் பெரும் எண்ணிக்கையில் கூட்டமாக தன்னை உணர்தலை அடைய முடிந்தது.
ஸ்ரீமாதாஜி அவர்கள் தன் கடந்த 37 வருடங்களாக இடையறாது உலகம் முழுக்க பயணம் சென்று இந்த தன்னை உணருதலை அனைவருக்கும் இலவசமாக கொடுத்துள்ளார்கள். இந்த உயரிய செயலுக்காக பல நாடுகளின் கௌரவங்களையும் யுனைடெட் நே ஷனலின் அமைதிக்கான பரிசையும் 1989 ல் பெற்றதோடு மட்டுமல்லாமல் உலக அரங்குகளில் மருத்துவம் மற்றும் சமுதாய விஷயங்களையும் பல முறை பேசியும் இருக்கின்றார்கள்.
தியானத்தில் அமர்ந்திருக்கும் போது உங்களை நீங்களே இந்த ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவி யார்? என்று கேட்டுப் பாருங்கள். உங்களுக்கு எண்ணங்களற்ற நிலை மட்டுமல்லாமல் அன்னை யார் என்றும் தெரியும்.