நற்சான்றிதழ்

ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவி சஹஜ யோகா அறக்கட்டளை-தமிழ்நாடு
ப்ளாட் நம்பர் F-69
விவேகானந்தர் தெரு
சாலிகிராமம்
சென்னை-600 093.

பத்மா சாரங்கபாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் நிர்வாகம் சஹஜ யோகா தியானப் பயிற்சி முறையை 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரந்தோறும் வழிநடத்தி அவர்களுக்கு சமநிலையை மேம்படுத்தி, மன அழுத்தத்தை போக்கி, அறிவுத்திறனை வளர்த்தமைக்கு சஹஜ யோகா அறக்கட்டளையின் சென்னைக் கிளைக்கு நாங்கள் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.    

இந்த பயிற்சி முகாம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சரிசமமான வரவேற்பையும் பாராட்டுதலையும் பெற்றுள்ளது. மாணவர்கள் தங்கள் பயிற்சி பற்றிய கருத்துகளை தெரிவித்ததில் தங்கள் அடிப்படைப் பிரச்சினைகளான கவனக்குறைவு, ஞாபக சக்தியின்மை, பயம், பதற்றம், தலைவலி போன்றவைகளை எளிதில் போக்க உதவி செய்தது. சஹஜ யோகா தியானத்தின் போது மாணவர்களுக்கு ஒரு மிகவும் தனிப்பட்ட, அழகான, சந்தோஷமான அனுபவம் ஏற்பட்டு ஆழ்ந்த அமைதி மற்றும் சமநிலையை அனுபவிக்க நேர்ந்தது. நாங்கள் உறுதியாக சொல்கிறோம் சஹஜ யோகா தியானத்தை அன்றாடம் பயின்று வந்தால் மாணவ சமுதாயத்திற்கு பெரும் நன்மைகள் உண்டாகும் என்பதை  பல்வேறு கோணங்களிலிருந்தும்  காணலாம். அது பொறுப்புள்ள  மாணவர்களை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல் அவர்கள் வருங்காலத்தில் சமுதாயத்தின் ஒரு பொறுப்புள்ள குடிமகனாக உருவாக்க வழி வகுக்குகிறது.
வருங்காலத்திலும் மாணவர்களின் நலம் கருதி சஹஜ யோகா தியானப் பயிற்சி வகுப்புகள்  தொடர்ந்து நடைபெற்று வரும் என நம்புகிறோம்.     
நன்றி
இப்படிக்கு
முதல்வர்
பத்மா சாரங்கபாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி
விருகம்பாக்கம்
சென்னை-600 092.

பத்மா சாரங்கபாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, விருகம்பாக்கம்,சென்னை-600 092.
21 April, 2014