நமக்குள் அமைந்த முக்கியமான ஆற்றலுடன் கூடிய குண்டலினி என அழைக்கப்படும் தாய் சக்தியினை விழிப்புறச் செய்து செயல்படுத்தச் செய்வதே ஆன்ம விழிப்புணர்வு எனப்படும்.
இந்த ஜீவனுள்ள சக்தி மேல் நோக்கி எழும் போது நமக்குள் பல சக்தி மையங்கள் என அழைக்கப்ப்டும் சக்கரங்களின் வழியாக ஊடுருவி மேலெழும்புகிறது. உடல்நலம், சமாதானம், உற்சாகம், ஆற்றல், நல்வாழ்வு போன்ற செயல்களை இந்தச் சக்கரங்கள் என அழைக்கப்படும் சக்தி மையங்கள் செய்கின்றன.
நமது முதுகு எலும்பின் அடித்தளத்தில் இந்த குண்டலினி அமைந்துள்ளது. இது மேலெழும்பும் போது ஏழு சக்தி மையங்களின் ஊடே ஊடுருவிச் சென்று நூலிழை போன்ற இணைப்பை ஏற்படுத்தி தலையின் உச்சியின் வழியே வெளியேறுகிறது.
இவ்வாற்றலை நம் கை விரல்களின் நுனியின் வாயிலாக உணருகிறோம். இந்த சக்கரங்களை அதாவது சக்தி மையங்களைப் பழுதடைவதால்தான் நாம் நோய்வாய்ப்படுகிறோம். இந்த சக்ராக்களை அதாவது சக்தி மையங்கலளை பழுதுபார்த்து குணப்படுத்தி, தாயன்பால் அரவணைத்து நம்மைப் பழைய நிலைமைக்கு கொண்டு வருவது இந்த குண்டலினியாகும்.
இந்த குண்டலினி மேலெழும்பி நம் உள்ளே பாய்ந்து மனித உடலின் எல்லாப்பகுதிகளையும், ஒருங்கிணைக்கப்படுவதால் பிரகாசிக்கின்றோம். இந்த நிலையில் அமைதிவாய்ந்த மோன நிலையினை உணரும் ஆற்றலைப் பெறுகிறோம். இந்த நிலைதான் எண்ணங்களற்ற உணர்வு நிலை என்பதாகும்.
நீங்கள் இந்த ஆத்ம விழிப்புணர்வு பெற தயாரானவுடன், அமைதியாக நிமிர்ந்து உட்கார்ந்து, சம்மணம் போட்டுக்கொண்டு தரையில் உட்காரவும். உங்களுக்கு நாற்காலியில் உட்கார விரும்பினால், இரண்டு கால்களையும், காலணிகளைக் கழற்றிவிட்டு, சிறிது அகல விரித்துக்கொண்டு உட்காரவும்.
இந்த அனுபவத்திற்காக உங்கள் இடது உள்ளங்கையை மேல் நோக்கி மடி மேல் பின்னர் வலது கையை உங்கள் உடலின் இடது பக்கத்தின் பல பாகங்களின் காணொளி மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களில் சொல்லியவாறு செய்யவும் .
கீழே உள்ள காணொளி காட்சியில் அன்னை ஸ்ரீ நிர்மலா தேவி இந்த ஆத்ம விழிப்புணர்வை கொடுக்கின்றார் .
அன்னை அவர்கள் கூறியதை கீழே 1 முதல் 9 படங்களாக கொடுக்கப்பட்டுள்ள. இந்த எளிதான செயல் முறைகளை பின்பற்றி இந்த ஆத்ம விழிப்புணர்வை அடையலாம் . ஒவ்வொரு உறுதிமொழியினையும் உள்ளத்திலிருந்து சொல்லவும்.
நீங்கள் அன்னை எனக் கூறுவது உங்களின் குண்டலினி சக்தியினைக் குறிப்பிடுகிறது.
இறுதியில் இரண்டு கைகளையும் மாடி மீது வைத்து உச்சந்தலையில் கவனத்தை வைத்து சிறிது நேரம் தியானத்தில் இருக்கவும் .
சிறிது நேரத்திற்கு பின்பு இடது உள்ளங்கையை எடுத்து உச்சந்தலையில் சற்று மேலே முன்னும் பின்னும் நகர்த்தி பார்க்கும்போது உள்ளங்கையில் ஏதாவது குளிர்ந்த அல்லது சூடான மெல்லிய ஒரு உணர்வு தென்படலாம் . மேலும் விவிரல் நுனிகளில் ஒரு உணர்வு தென்படலாம்.
இதுதான் அந்த தெய்வீக அதிர்வுகள் மற்றும் ஆத்ம விழிப்புணர்வு.
எதுவும் தெரியவில்லை என்றால் இதை தொடர்ந்து சில நாட்களுக்கு செய்து வரும்போது இதை நீங்கள் உணரலாம் .
மேலும் இதைப்பற்றியே மேலும் அறிய எங்கள் இலவச தியானமையங்களை அணுகலாம் .
தியான உதவிக்குறிப்புகள் - ஆரம்ப பயிற்சியாளர்களுக்கு 12 சிறந்த தியான உதவிக்குறிப்புகள்
நீங்கள் காலையில் எழுந்து 10 முதல் 15 நிமிடங்கள் வறை தியானம் செய்வதால், எண்ணங்களற்ற நிலைக்கு எளிதாக செல்வதுடன் அதிர்வுகளை உணரவும் முடிகிறது.
Testimonals
நற்சான்றிதழ்
ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவி சஹஜ யோகா அறக்கட்டளை-தமிழ்நாடுப்ளாட் நம்பர் F-69விவேகானந்தர் தெருசாலிகிராமம்சென்னை-600 093.பத்மா சாரங்கபாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் நிர்வாகம் சஹஜ யோகா தியானப் பயிற்சி முறையை 8-ம் வகுப்பு...