பாதங்களை உப்பு நீரில் அமிழ்த்துதல்
நீர் தத்துவம்:
இடது மற்றும் வலது நாடிகளின் செயல்பாடுகளை தணித்து தூய்மைப்படுத்துவதால் மனம் மிகுந்த ஆழமான அமைதி நிலையை அடையகிறது.
இரவில் தூங்கச் செல்வதற்கு முன் இதை செய்தல் மிகவும் பயனுடைய ஒன்றாகும்.
படத்தில் காட்டியவாறு ஒரு நாற்காலியில் இரு கைகளும் அன்னையின் படத்தை நோக்கியவாறு வசதியாக அமரவும். ஒரு பேசினில் ஒரு பிடி கல் உப்பு கலந்த நீரில் இரண்டு பாதங்களையும் கணுக்கால் அளவு நனைத்திருக்குமாறு 10 (அ) 15 நிமிடங்கள் வைத்திருந்து தியானம் செய்யவும். சமநிலைப்படுத்திக் கொள்ளவும். ஒவ்வொரு சக்கரத்திலும் கவனம் செலுத்தி எதிர்மறை சக்திகளை உப்பு நீர் எடுத்துக் கொள்வதாகக் கொள்ளவும்.
அருகில் ஒரு குவளையில் கால்களை சுத்தம் செய்ய தண்ணீர் வைத்திருக்கவும். பின்பு கால்களை எடுக்கும் பொழுது பேசினுக்குள்ளேயே சுத்தம் செய்தல் வேண்டும். பிறகு அந்த நீரை யார் மேலும் படாதவாறு கழிவறையில் கொட்டி விடவும். பேசினையும் கை, கால்களையும் சுத்தம் செய்து மறுபடியும் சிறிது நேரம் தியானம் செய்யலாம். வலது பக்க உபாதைகளுக்கு குளிர்ந்த நீரையும், இடது பக்க உபாதைகளுக்கு வெந்நீரையும் உபயோகப்படுத்தவும்
மெழுகுவர்த்தி ஒளி முறை
அன்னையின் திருவுருவப்படத்திற்கு முன் ஓர் மெழுகுவர்த்தியை ஏற்றவும். எரியும் மெழுகுவர்த்தியை இடப் பக்கத்திற்கு நேரே கீழிலிருந்து மேல் நோக்கி இட நாடிக்கான மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே செய்ய வேண்டும். மீண்டும் கீழே வரவும் கடிகாரம் முள் சுற்றுவது போல்.
முன் ஆக்ஞா சக்கர குறைபாடுகளுக்கு மெழுகுவர்த்தியின் ஒளி மூலமாக அன்னையின் திலகத்தைப் பார்க்கவும்
ஐஸ் பொதி
தியானம் செய்யும் போது எண்ணங்களற்ற நிலையைப் பராமரிக்க கடினமாக இருந்தால் அதற்கு ஒரு விரைவான நிவாரணம் உள்ளது. மிகைப்பான கல்லீரலின் விளைவாக தேவையற்ற எண்ணங்கள் அதிகமாக காணப்படுவதால். உண்மையில் சுவாதிஷ்டான சக்கரம் கல்லீரலைப் பார்த்துக் கொள்வது சிரமம், அதற்கு காரணம் ஒரு நபர் அவரது / அவளது சிந்தனை ஆற்றலை மிகவும் அதிகமாக உபயோகப்படுத்துவதால் ஏற்படுவது. சஹஜ வகையில் ஒரு 'சூடான' கல்லீரலை தியானம் செய்யும் போது உங்கள் உடலின் வலது பக்கத்தில் ஒரு பனிப் பொதியையோ அல்லது மற்ற குளிர் பொதியையோ வைப்பதன் மூலம் சரி செய்து கொள்ளலாம். தியானத்தை மேம்படுத்துவதற்கான இந்த சூழ்நிலையில் நீங்கள் ஒரு நல்ல பயனுள்ள முறையை நீங்கள் காண்பீர்கள்.