தினந்தொறும் தியானம்
நீங்கள் காலையில் தியானம் செய்யத் தவறினால் பரவாயில்லை, முதலில் நீங்கள் தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் தியானம் செய்ய நேரம் உள்ளது என்பதை உறுதி செய்யுங்கள். நீங்கள் வழக்கமாக "எனக்கு நேரம் இல்லை", என்று சொல்ல வேண்டாம், தியானத்தைத் தொடர்ந்து செய்வதால் அது உங்கள் வேலையைச் சிறப்பாகவும் வேகமாகவும் செய்ய உதவுகிறது. எனவே 15 நிமிடங்கள் அதற்காக ஒதுக்குவதால் அதனால் ஏற்படும் பலன்களை ஒப்பிடும்போது நாம் ஒதுக்கப்படும் நேரம் பெரிதாக தெரியாது.
அமைதியான காலை தியானம்
நீங்கள் காலையில் எழுந்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை தியானம் செய்வதால், எண்ணங்களற்ற நிலைக்கு எளிதாக செல்வதுடன் அதிர்வுகளை உணரவும் முடிகிறது.
இடம் மற்றும் தியானம் நிலைப்பாடு
ஒரு அமைதியான, வசதியான இடத்தைக் கண்டுபிடித்து, மிகவும் சாதாரணமான நிலையில் உட்காரவும்.
எண்ணங்களுடன் போராடாதீர்கள்
நீங்கள் தியானம் செய்ய அமர்ந்தவுடன், நீங்கள் தியானம் செய்கிறீர்கள் என்று விழிப்புடன் இருங்கள். உங்கள் தலை மேல் (லிம்பிக் பகுதி) துல்லியமான கவனத்தைச் செலுத்தியவுடன், முழு அமைதியை நீங்களே உணரலாம். இப்போது நேரம் ஸ்தம்பிக்கட்டும், நேரத்தில் ஏற்படும் இடைவெளியில் எண்ணங்கள் எழவும் விழவும் உதவுங்கள், அதனால் உங்கள் சிந்தனை தடைபெறுகிறது, ஆனால், எண்ணங்களற்று விழிப்புணர்வு ஏற்படுகிறது. "நான் இந்த எண்ணத்தை மன்னிக்கிறேன், நான் மன்னிக்கிறேன், நான் மன்னிக்கிறேன்" என்று சொல்ல முயற்சிக்கவும்.
பொருட்கள் மீது கவனம் செலுத்த முயற்சிக்க வேண்டாம்
தியானம் என்பது கவனமோ, காட்சிப்படுத்தலோ அல்லது உங்கள் எண்ணங்களை நிறுத்த முயற்சிப்பதோ பற்றி அல்ல. அதைத், தன் போக்கில் விட்டு உள் முகமாக கவனம் செலுத்தி மன அமைதியுடன் சரணடைவதாகும். உங்கள் வேலையைக் குண்டலினியிடம் செய்ய விடுங்கள்.
உங்கள் குண்டலினியுடன் தொடர்புகொள்ள கற்றுக் கொள்ளுங்கள்
தியானத்தில், உங்களுக்கு சொந்தமான குண்டலினியுடன் பேசுங்கள், பணிவாக உள் எழுச்சி பெற வேண்டியும், உங்களுடன் இணைத்து, மற்றும் எண்ணங்களற்ற விழிப்புணர்வு ஏற்பட கோரவும். குண்டலினி எழும்பும் போது அதன் சுய நிலையை நீங்கள் அறிவீர்கள், உங்கள் விரல் நுனிகளில் சக்கரங்களின் பிரதிபலிப்புகளை உணர ஆரம்பிப்பீர்கள். உங்கள் உள்ளங்கையில் குளிர்ந்தக் காற்றை உணர்வீர்கள்.
கூட்டுத் தியானம் செய்யுங்கள்
மற்ற பயிற்சியாளர்களுடன் சேர்ந்து செய்தால், உங்கள் குண்டலினி மிகவும் திறம்பட வேலை செய்ய முடியும். மற்றவர்களுடன் கூட்டு தியானம் செய்தால் நீங்கள் வேகமான முன்னேற்றம் காண முடியும், அதனால் உங்கள் வீட்டில் மற்றவர்களுடன் தியானம் செய்ய முயற்ச்சித்துப் பாருங்கள். உங்கள் அருகாமையில் உள்ள ஒரு சகஜ யோகா வார தியான மையத்தில் நீங்கள் உடனே பங்கேற்க பரிந்துரைக்கிறோம்.